செய்திகள்

கரிநாளன்று முழு ஊரடங்கு… தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி…..

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு தற்போது ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனெனில், அன்று பொங்க பண்டிகையின் கடைசிநாளான உழவர் திருநாள் ஆகும். நகரம் மற்றும் கிராமங்களில் அந்த நாளை கரிநாள் என அழைப்பார்கள். அன்று மாமிச விரும்பிகள் மாமிச உணவுகளை உண்டு மகிழ்வர். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும், தெருக்களிலும் அன்று பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.

குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், இசை நாற்காலி, நடன போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், ஆர்கெஸ்ட்ரா, பானை உடைத்தல், கோலப்போட்டி, ரேக்ளா ரேஸ் என பல விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசு வழங்குவார்கள். ஆனால், இதுவெல்லாம் நடந்தால் மக்கள் அதிகமாக கூடுவார்கள். எனவே, கொரோனா எளிதில் பரவும் என்பதால் இந்த வருடம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. எனவே, மக்கள் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version