இந்தியா

பெங்களூருரில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு: வேறு என்னென்ன கட்டுப்பாடுகள்?

Published

on

தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்றும் வெள்ளி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் அலுவலகம் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை நாளாக வைத்திருக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாகவும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் நடைபெறும் என்றும் அதேபோல் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் மால்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்ட உள்ளிட்டவை 50 சதவீத பார்வையாளர்களுடன் கொரோனா வைரஸ் வழிகாட்டி நெறிமுறைகளுடன் இயங்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிக்கு 200 பேர்கள் மட்டுமே அனுமதி என்றும் இறுதி நிகழ்ச்சிக்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு இருந்தாலும் எந்த விதமான திருவிழாக்களும் விசேஷங்களும் நடக்கக்கூடாது என்றும் ஒவ்வொரு கோவிலிலும் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிலும் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம்கள் 50 சதவீத பயனாளிகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் உள்பட எந்த விதமான நிகழ்வுக்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version