உலகம்

மீண்டும் முழு ஊரடங்கு: ரஷ்ய அரசின் முடிவால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளிலும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சீனா, ரஷ்யா உட்பட மீண்டும் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதையடுத்து ரஷ்யாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது

கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவில் மிக அதிகமாக பரவி வருவதாகவும் நேற்று ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய வில்லை என்றால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என ரஷ்ய நாட்டின் அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version