தமிழ்நாடு

வார இறுதி நாட்களில் முழு முடக்கமா? தமிழக அரசு ஆலோசனை செய்வதாக தகவல்!

Published

on

வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதன் காரணமாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அல்லது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக்கு பின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு மாதங்களுக்கு மேலாக முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் கஷ்டப்பட்டனர் என்பதும் மீண்டும் முழு ஊரடங்கு என்றால் தாங்காது என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருவதால் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version