தமிழ்நாடு

திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை முதல் திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதை பார்ப்போம்.

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என்பதும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கு என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரையரங்குகளை பொருத்தவரை நாளை முதல் இரவு காட்சி செயல் படாது என்றும் பகலில் மூன்று காட்சிகள் மட்டுமே செயல்படும் என்றும் அதேபோல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள் முதல் சனி வரை மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காரணமாக வலிமை உள்பட பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது. சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் 3 காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Trending

Exit mobile version