தமிழ்நாடு

பொங்கல் விடுமுறைக்கு பின் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்: எத்தனை நாட்கள் இயங்கும்?

Published

on

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது இதனை அடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்த ஏராளமானோர் சொந்த ஊரை நோக்கி சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் நாளை முதல் இயங்கவுள்ளதால் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை அதிகாலை 5 மணிக்கு மேல் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்றும் இந்தப் பேருந்துகள் ஜனவரி 19ஆம் தேதி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஜனவரி 20 ஆம் தேதியிலிருந்து தான் அரசு அலுவலங்கள் இயங்க உள்ளதை அடுத்து ஜனவரி 19ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 16709 பேருந்துகள் தமிழக அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்திருப்பதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

எனவே நாளை முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 16709 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்றும் இந்த பேருந்துகளை சொந்த ஊரிலிருந்து மீண்டும் சென்னை திரும்பும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version