இந்தியா

நவம்பர் 1 நாளை முதல் என்னென்ன மாற்றங்கள்: முழு விபரங்கள்!

Published

on

நவம்பர் 1ஆம் தேதி அதாவது நாளை முதல் ஒரு சில மாற்றங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி உயர்த்தப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் மீண்டும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வதால் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் சமையல் கியாஸ் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சிலிண்டர் டெலிவரி செய்யும் நபரிடம் ஓடிபி எண்ணை தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என்றும் இந்த நடைமுறை ஒரு சில இடங்களில் சோதனை முயற்சியாக செய்து வந்த நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி நாளை முதல் இந்திய ரயில்வேயில் சில ரயில்களின் புறப்படும் நேரம்ம் சென்றடையும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 13 ஆயிரம் பயணிகள் ரயில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களின் நேரம் மாற்றம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் நாளை முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட அளவுக்குமேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், பணத்தை எடுத்தாலும் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியை அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கு ஸ்டேட் வங்கியில் புதிய வசதி நாளை முதல் அமல்படுத்த உள்ளது. இதன் படி ஓய்வூதியம் பெறுபவர்கள் லைவ் சான்றிதழ் வழங்குவதற்காக நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் வீடியோ கால் செய்து தங்களுடைய இருப்பை ஓய்வூதியதாரர்கள் தெரிவித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version