தமிழ்நாடு

நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: நேரமாற்றம் உண்டா?

Published

on

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் இயங்கும் நேரத்தை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முடிவு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வாகனம் மற்றும் பள்ளி வளாகம் முறையாக பராமரிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரம் ஒரு நாள் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நீதி போதனை வகுப்புகள் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version