இந்தியா

நாளை முதல் இரவுநேர ஊரடங்கு: அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு!

Published

on

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுக்கும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மிக விரைவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் என்பதும் ஆலோசனைக்குப் பின்னரே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சுபகாரியங்களுக்கு தட்டுப்பாடு என்றும் உபி அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது உத்தரபிரதேசத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் விரைவில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version