தமிழ்நாடு

நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Published

on

நாளை முதல் 27 மாவட்டங்களில் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும், ஏற்கனவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நாளை காலை 6 மணி முதல் மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து நடைபெறும் எனவும், 50% பயணிகளுடன் அரசு பேருந்துகள் விரைவு பேருந்துகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் தமிழகம் முழுவதும் 9333 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பயணிகளின் வருகை ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சானிடைசர், தனிமனித இடைவெளியை பயணிகள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. நோய் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க விட்டால் பேருந்துகளில் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version