தமிழ்நாடு

40 நாட்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Published

on

தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது என்பதும், மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. ஆனால் திடீரென மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்கள் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது என்பதும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதே போல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து நாளை பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்லூரிகள் தற்போது சானிடைசிங் செய்து சுத்தம் செய்யப்படுவதாகவும் மற்ற முன்னேற்பாடுகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version