இந்தியா

திருப்பதியில் இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசனம் டோக்கன்: இணையதள முகவரி அறிவிப்பு

Published

on

திருப்பதி கோவில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதும் அதற்கான இணைய தள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி கோவில் மூடப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் கோவில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக ரூபாய் 300 தரிசன டிக்கெட் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளூர் மக்களுக்கு மட்டும் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மற்ற மாநில பக்தர்களின் கோரிக்கையை அடுத்து சமீபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும், தினசரி 8000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலவச டோக்கன்களை பெறுவதில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டிருப்பதாலும், கொரோனா வைரஸ் விதிமுறைகளை காற்றில் பறக்கவிடப்பட்டு கொண்டிருப்பதாலும் இனிமேல் இலவச டோக்கன் ஆன்லைனில் தான் தரப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச தரிசன டோக்கன்களை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான இலவச தரிசனம் முன்பதிவு செய்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த தொழில்நுட்ப வசதியை இலவசமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version