தமிழ்நாடு

ரங்கநாதன் தெரு உள்பட தடை செய்யப்பட்ட 9 இடங்களில் இன்று முதல் கடைகள் திறப்பா?

Published

on

சென்னையில் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் கடைகள், அங்காடிகள் திறக்க தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் கடைகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பிரிக்கில்ன் சாலை வரை, ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவிமையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கடைகள் திறக்க தடை விதித்தது.

சென்னை மாநகராட்சி விதித்திருந்த இந்த தடைக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தடை தொடர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி விதித்த தடை இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

தடையை நீடிப்பது குறித்து சென்னை மாநகராட்சி இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதால் இன்று முதல் சென்னையில் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை செய்யப்பட்ட இடங்களில் கடைகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version