தமிழ்நாடு

தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று தொடக்கம்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கொரோனா பரவல் இடையே தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில் இன்று முதல் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் இன்று முதல் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கும் என்றும் 70 குழுக்கள் மூலம் இந்த தபால் வாக்குகள் பெறப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக இன்று 7300 பேர்களிடம் தபால் வாக்குகள் பெறப்படும் என்று கூறிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதன் பின்னர் படிப்படியாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக தேர்தலை பொறுத்தவரை தபால் வாக்குகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் ஒரு சில தொகுதிகளை மட்டும் தபால் வாக்குகளால் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version