தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த முழு தகவல்: புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு சென்னையிலிருந்து 10 ஆயிரத்து 300 சிறப்பு பேருந்துகளும் தமிழகம் முழுவதும் 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து வழக்கமாக இயங்கும் 2100 பேருந்துகள் உடன் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மூன்று நாட்களுக்கும் சேர்ந்து 10300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் உள்ளன என்றும் பேருந்துகள் இயக்கம் குறித்தும், எந்தெந்த ஊர்களுக்கு செல்வதற்கு எந்தெந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளில் ஏற வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்ள மற்றும் பேருந்துகள் குறித்து புகார் அளிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும் தனியார் பேருந்துகளான ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிக கட்டணம் குறித்து 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version