சினிமா செய்திகள்

நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் கடந்த சில நாட்களாக நடைபெறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நவம்பர் மாதத்தில்தான் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நவம்பர் மாதத்திற்கு 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா வளாகத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் 8000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் குவிந்து வந்ததை அடுத்து இட நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் இலவச தரிசனத்துக்கு ஆன்லைனில் மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஒவ்வொரு நாளும் 8000 டோக்கன்கள் என்ற எண்ணிக்கையில் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இலவச தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இலவசமாக இணைய வசதி செய்து கொடுத்தது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் மாதம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் இன்று நாள் தினமும் 12 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுக்கள் மற்றும் நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவசம் டோக்கன்களை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version