தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: மனுதாக்கல் செய்ய என்னென்ன விதிமுறைகள்?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தினம் மார்ச் 19ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் நாளையும் நாளை மறுதினமும் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த இரண்டு நாட்களும் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்றும் இன்று முதல் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், 22 ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி தினம் என்றும் அன்றே இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா விதிமுறையை வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தொகுதியில் போட்டியிடுவோர், வேட்பு மனு தாக்கல் செய்ய கட்டணமாக, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், எஸ்.சி., – எஸ்.டி., வேட்பாளர்கள், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இந்த கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது ‘ஆன்லைன்’ மூலமாகவோ செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version