தமிழ்நாடு

இன்று முதல் இரவுநேர ஊரடங்கு: சென்னையை காலி செய்யும் வெளியூர்வாசிகள்!

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது நேற்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாட்டுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலாகிறது. இதனால் சென்னையில் வேலை செய்யும் வெளியூர் வாசிகள் சென்னையை காலி செய்யும் முடிவில் உள்ளனர்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், பகலில் பல்வேறு கட்டுப்பாடும் உள்ளதால் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து அன்றாட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி செல்ல முடிவு செய்திருப்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டும்தான் இயங்கும் என்பதால் பகல் நேரத்தில் அதிக கூட்டம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை கொரோனா முதல் அலை வந்தபோதும் இதே போன்று தான் சென்னையை காலி செய்து விட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊரை நோக்கி சென்றனர் என்பதும் அதே நிலைமை தற்போது மீண்டும் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version