இந்தியா

இன்று முதல் ஷோரூம்களில் ஜியோ போன் நெக்ஸ்ட்: குவியும் ஆர்டர்கள்!

Published

on

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து உருவாக்கிய ஜியோ போன் நெக்ஸ்ட் இன்று முதல் ஷோரூம்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான போன்கள் ஆர்டர் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கூகுள் மற்றும் ஜியோ போன் இணைந்து உருவாக்கியுள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் ஏற்கனவே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் உள்ள சாப்ட்வேர்கள் ஆட்டோ அப்கிரேட் ஆகக்கூடியது என்பதும், கூகுள் நிறுவனம் வடிவமைத்து இருப்பதால் மிகச் சிறந்த அளவில் இந்த போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரூபாய் 6,499 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த போன் இன்று முதல் ஷோரூம்களில் விற்பனை ஆகிறது என்றும் இதனை முன்பணமாக ரூபாய் 1,999 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. இந்த போனை முன்பதிவு செய்துகொள்ள வேண்டுமென்றால் 7018270182 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றும் அதன் பிறகு 30 ஆயிரம் சில்லரை வர்த்தக கடைகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்று ஜியோ போன் நெக்ஸ்ட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்:

5.45 இன்ச் HD டிஸ்ப்ளே

13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா

8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவு

2 ஜி.பி. ரேம் மெமரி மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோஜ் வசதி

இன்டர்னல் ஸ்டோரேஜை 512 ஜி.பி.வரையில் அதிகரிக்கலாம்

3,500mAh பேட்டரி

3.5mm ஆடியோ ஜேக், ப்ளூடூத் v4.1, வை-பை, டுயல் நானோ சிம்கள்

seithichurul

Trending

Exit mobile version