இந்தியா

இன்று முதல் 100% பணியாளர்களுக்கு ஒப்புதல்: மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

இன்று முதல் அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள் பணி புரியலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவற்றில் ஒன்று அரசு பணியாளர்கள் 50% ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுழற்சி முறையில் 50% பணியாளர்கள் பணி புரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தளர்வாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் 100% பணி புரியலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே இன்று முதல் இந்த கூடுதல் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நூறு சதவீத பணியாளர்கள் பணி புரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version