இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில்: இன்று முதல் மற்ற மாநில பக்தர்களுக்கும் அனுமதி!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்துக்களின் புனிதமான கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திராவிலிருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்து வருவது வழக்கமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும், குறிப்பாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக முதல் கட்டமாக ரூபாய் 300 தரிசன டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் இலவச தரிசனம் செய்யலாம் என்றும் மற்ற நகரம் மற்றும் மற்ற மாநில பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததூ. இந்த நிலையில் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு புனிதமான மாதம் என்பதால் ஏழுமலையானை தரிசிக்க மற்ற மாநிலங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் இன்று முதல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க தமிழக பக்தர்கள் உள்பட பிற மாநில பக்தர்கள் இன்று முதல் பதினொன்று முப்பது மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் நடை சாத்தப்படும். இலவச தரிசனத்திற்கு இதுவரை 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 8,000 டோக்கன்கள் என தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் அதை காண்பித்தால் மட்டுமே டோக்கன் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version