இந்தியா

நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது: சுதாரித்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை!

Published

on

நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதும் இதனை அடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ச்சியாக நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு வங்கி ஊழியர் சங்கம் வரும் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இதனை அடுத்து இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் இரண்டு நாட்களான திங்கள் மற்றும் செவ்வாய் என நான்கு நாட்கல் வங்கிகள் இயங்காது. எனவே டெபாசிட், செக் கிளியரன்ஸ் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும் என்றும் ஏடிஎம் சேவைகளும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் இயங்காது என்பதால் இன்றே வங்கிகள் சம்பந்தமான அனைத்து பணிகளையும் முடித்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version