தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை: மாநகராட்சி ஏற்பாடு

Published

on

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது

நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது என்பதும் அதேபோல் சென்னையில் 1500ஐ நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்தனர். காய்ச்சல் இருப்பவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்

அந்த வகையில் சென்னையில் இன்று முதல் மீண்டும் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது

இன்று முதல் இந்த களப்பணியாளர்கள் சென்னையில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்வார்கள். வெப்பநிலை அதிகமாக இருப்பவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Trending

Exit mobile version