தமிழ்நாடு

இன்று முதல் கத்தரி வெயில்: வாட்டி வதைக்கப்போகிறது கோடை வெப்பம்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் பொதுமக்களை வாட்டி வதைக்கும் என்ற நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் 25 நாட்களுக்கு இருக்கும் என்றும் இந்த வெப்பமானது வருகிற 29-ஆம் தேதிதான் முடிவடையும் என்றும் தெரிகிறது.

அக்னி நட்சத்திரம் கால கட்டத்தின் போது வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம் என்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்டிப்பாக இந்த நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்றும் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் உடலில் நீர் வற்றிப் போய் இருக்கும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version