இந்தியா

ஆசியாவின் விலையுயர்ந்த நகரங்கள், மலிவான நகரங்கள் பட்டியல்.. சென்னைக்கு எந்த இடம்?

Published

on

ஆசியாவின் விலை உயர்ந்த நகரங்கள் மற்றும் மலிவான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

EIU (Economist Intelligence Unit, Economist Group என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உலக அளவில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும் நகரங்கள் மற்றும் மலிவாக இருக்கும் நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பட்டியலின்படி வாழ்வதற்கு மிகவும் குறைந்த மற்றும் அதிக விலையுள்ள ஆசிய நகரங்கள் குறித்த பட்டியலில் ஜப்பான் நாட்டின் இரண்டு நகரங்கள் அதிக விலை உயர்ந்த நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் கராச்சி மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்கள் மிகவும் மலிவான நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் உள்ள 12 நகரங்கள் மிகவும் மலிவான நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதில் நான்கு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலின்படி சிங்கப்பூர் தான் ஆசியாவிலேயே மிகவும் அதிக விலை உள்ள நகரமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் கராச்சி மிகவும் விலை மலிவான நகரமாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசியாவின் குறைந்த செலவில் வாழும் நகரங்களின் பட்டியலில் அகமதாபாத், சென்னை, பெங்களூர் மற்றும் புதுடெல்லி ஆகியவை உள்ளன என்பதும் விலை உயர்ந்த நகரங்களையும் பட்டியலில் சிங்கப்பூர், ஹாங்காங், சியோல் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ மற்றும் ஒசாகாஆகிய இரண்டு நகரங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு உலகின் விலை உயர்ந்த நகரமாக இருந்த நிலையில் தற்போது அவை சிறிது அளவு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்கள் தான் ஆசியாவிலேயே மிகவும் குறைந்த மலிவான நகரங்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டுக்கு அனுப்பும் ஊழியர்களின் சம்பளம், அந்த நாடுகளின் பணவீக்கம், கரன்சியின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மொத்தம் 178 நகரங்கள் பட்டியலில் கணக்கிடப்பட்டது என்றும் அந்தந்த நாட்டு கரன்ஸி டாலராக மாற்றப்பட்டு, அந்நிய செலவானி கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் அளவை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகவும் மலிவான நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் நான்கு நகரங்கள் உள்ளன என்பதும், அதில் சென்னை ஒரு நகரமாக உள்ளது என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

Trending

Exit mobile version