இந்தியா

இனி சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் சி.ஏ.பி.எப். தேர்வு, தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் அனைத்து விதமான தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு

இந்தியாவில் நாடு முழுவதிலும் இருக்கும் பல்வேறு ஆயுதப் படைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் வருகின்ற 2024 ஜனவரி 1 ஆம் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட சுமார் 15 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

முதல்வர் வரவேற்பு

மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசின் அனைத்து விதமான தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும். நான் எழுதிய கடிதத்தின் காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version