இந்தியா

மே 12 முதல் எந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் பயணம் செய்ய முடியும்.. சென்னைக்கு எத்தனை ரயில்!

Published

on

மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் கீழ் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, மே 12 முதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 15 பயணிகள் ரயில்கள், டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு, செக்கந்தராபாத், திருவனந்தபுரம் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக டெல்லியிலிருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு-தாவி மற்றும் கோவா வழித்தடங்களில் ரயில் சேவை கிடைக்கும்.

இந்த ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட்களை மே 11, மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்யலாம். ரயில் டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ரயில் நிலயங்களின் முன்பதிவு கவுண்டர்களில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாது.

முக்கியமாக, ஊரடங்கு காலத்தில் இயக்கும் இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றால் முன்பதிவு செய்வது கட்டாயம். முன்பதிவு இல்லா டிக்கெட்கள் கிடையாது.

மேலும் ரயிலில் பயணிக்க விரும்பும் ரயில் பணிகள், தங்களது கொரோனா பதிப்பு இல்லை, கொரோனா அறிகுறிகள் இல்லை என்று உறுதி செய்ய வேண்டும். பயணிக்கும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.

விமானத்திற்கு செல்வது போன்று ரயில் நிலையங்களுக்கு ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பே வந்துவிட வேண்டும்.

முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தம் அளிக்கப்படும். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணங்கள் வசூலிக்கப்படும். பயணிகளின் வரவேற்பைப் பொருத்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பிற பயணிகள் ரயில் சேவைகளுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வர வாய்ப்புகள் உண்டு.

கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்காக மார்ச் 25 முதல் பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 48 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளன.

பயணிக்கும் போது உணவு மட்டும் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

seithichurul

Trending

Exit mobile version