இந்தியா

18 வயது முதல் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

Published

on

மத்திய அரசு 3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இன்று பிரதமர் மோடி தலைமையிலான குழுவினர், கொரோனா தடுப்பூசி குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதில் முக்கியமாக 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில் 5 சதவீத தடுப்பூசி மத்திய அரசுக்கும், மீதியைத் திறந்த சந்தையில் மாநில அரசுகளுக்கும் விற்பனை செய்யலாம் என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம்.

மத்திய அரசு இப்போதைக்குத் தேவை அதிகமாக உள்ளவர்களுக்கும், மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 45 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக வழங்கும். பிறருக்கு எப்போது முதல் இலவசம் என்று விரைவில் அறிவிக்கும்.

இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரஷ்ய்வாவின் Sputnik கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரஷ்யாவில் இருந்து தடுப்பூசியை இந்திய அரசு இறக்குமதி செய்யும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் குறையும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version