தமிழ்நாடு

அதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு!

Published

on

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையில் மட்டுமே செயல்படும்.

இப்படி கடைகளின் நேரத்தைக் குறைப்பதன் மூலம், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க முடியும் என்றும் அதனால் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவுவதைக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

காய்கறி மார்க்கெட்களில், காலை 6 மணிக்கு முன்பாகவே வாகனங்களிலிருந்து பொருட்களை இறக்கிவிட வேண்டும்.

உணவகங்கள் காலை 7 முதல் 9:30 மணி வரையிலும், பிற்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரையிலும் மதிய உணவும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையில் இரவு உணவும் விற்பனை செய்யலாம். ஆனால் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

ஆம்புலன்ஸ் தவிரப் பிற வாகனங்களுக்குக் காலை 6 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையில் மட்டுமே பெட்ரோல், டீசல் பொது மக்கள் வாகனங்களுக்கு வழங்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version