சினிமா செய்திகள்

காந்தாரா முதல் ஆர்ஆர்ஆர் வரை ரூ.400 கோடி வசூலித்த தென் இந்திய படங்கள்!

Published

on

தமிழில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை செய்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்துடன் கன்னடத்தில் ரிலீஸாகி, பின்னர் மக்கள் கொடுத்த வரவேற்பில் பிற மொழிகளை டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன காந்தாரா திரைப்படம், 14 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 50 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை செய்துள்ளது.

இப்படி தென் இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த 9 படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

பாகுபலி

2015-ம் ஆண்டு எஸ்எஸ் ராஜமவுளி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலைச் செய்தது.

பாகுபலி 2

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 1500 கோடி ரூபாய் வசூலை செய்தது.

2.ஓ

10) 2.0 – 18 நாட்கள்

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.ஓ திரைப்படம் 2018-ம் அண்டு ரிலீஸ் ஆகி 600 கோடி ரூபாய் வசூலை செய்தது.

சாஹோ

பிரபாஸ் நடிப்பில் 2019-ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன சாஹோ திரைப்படம் 430 கோடி ரூபாய் வசூல் செய்யது.

ஆர்.ஆர்.ஆர்

எஸ்.எஸ்.ராஜமவுளி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஆர்.ஆர்.ஆர் படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

கேஜிஎப் 2

யாஹ் நடிப்பில் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 430 கோடி ரூபாய் வசூலௌ செய்துள்ளது.

விக்ரம்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் 450 கோடி ரூபாய் வசூலை செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் 1

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் 2023-ம் ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆக உள்ளது.

காந்தாரா

ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய காந்தாரா திரைப்படம் 50 நாட்கள் கடந்து திரை அரங்குகளில் ஓடி வரும் நிலையில் 400 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version