இந்தியா

ஜனவரி முதல் வாரம் 3 நாட்கள் விடுமுறையா? பரபரப்பு தகவல்!

Published

on

ஜனவரி முதல் வாரத்திற்கு நான்கு நாட்கள் பணி என்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்று அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டம் கொண்டு வந்தது என்றும் அதன்படி வேலை நாட்களை நான்கு நாட்களாக குறைக்கவும் பணி நேரத்தை அதிகரிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி தினமும் 8 மணி நேரம் வேலை என்பதற்கு பதிலாக 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பதிலாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டன.

இந்த விதிமுறைகளை பல மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே வரும் ஜனவரி முதல் வாரத்திற்கு நான்கு நாட்கள் பணி நாட்கள் மூன்று நாட்கள் விடுமுறை என்பது அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version