வணிகம்

பேஸ்புக் முதல் பைஜூஸ் வரை.. 2022-ம் ஆண்டு ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்த பிரபல நிறுவனங்கள்!

Published

on

விரைவில் ரெசஷன் வரப்போகிறது என செய்திகள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பல அடுத்தடுத்து பணிநீக்கத்தை அறிவித்துள்ளன.

எனவே இந்த ஆண்டு ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிறுவனங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பைஜூஸ்

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமாக உருவாகியுள்ள பைஜூஸ், அண்மையில் அதன் பிராண்ட் அம்பாசிடராக லியோனல் மேசியாவை அமர்த்தியது. ஆனால் இப்போது தங்களது செலவை குறைக்க 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து செபியிடமும் பைஜுஸ் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அக்டோபர் மாதம் 1 சதவீதம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. அதனால் 1000 ஊழியர்கள் வரை தங்களது வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்ரைப்

ஆன்லைன் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்டைப் 14 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக நவம்பர் மாதம் அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 14 வாரங்கள் இழப்பீடு தொகை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஸ்னாப்

புகைப்படம், வீடியோ பகிர்வு செயலியான ஸ்னாப், 20% ஊழியர்கள் என 1000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ்

ஆன்லைன் ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் இரண்டு கட்டங்களாக 450 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உள்ளது. வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

மெட்டா

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா, உலகம் முழுவதும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இது உலகின் மிகப் பெரிய ஊழியர்கள் பணிநீக்கம் என கூறப்படுகிறது.

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதை அடுத்து உலகும் முழுவதும் 50% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்வதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை என எலன் மஸ்க் நவம்பர் 4-ம் தேதி அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version