தமிழ்நாடு

மீடியா மூலமாக தமிழ் மொழியை வளர்க்க அரசு சார்பில் ‘தூய தமிழ் ஊடக விருது’ அறிவிப்பு!

Published

on

மீடியா மூலமாக தமிழ் மொழியை மேன்மைப்படுத்தும் விதமாக தமிழக அரசு’தூய தமிழ் விருது’  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘அன்றாடம் மக்களின் வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளை முன்னறிந்து கொடுக்கும் செம்மாந்த பணிகளைச் சிறப்புடன் செய்துவருகின்ற காட்சி, அச்சு ஊடகங்கள் மொழிக்காப்பிலும் முகாமையான பங்காற்றுகின்றன.

ஊடகமொழியே உலகமொழியாகிவிட்ட இன்றைய நிலையில், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் உதவியோடுதான் நல்ல தமிழ்ச் சொற்களையும் காலத் ற்கேற்ற பு ய தமிழ்க் கலைச்சொற்களையும் புழங்குமொழியாக்க முடியும்.

மொழிக்கலப்பைத் தவிர்த்தலே தமிழ்மொழியைக் காப்பதற்கும் வளப்படுத்துவதற்குமான அடிப்படையாகும். எனவே, தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் பாராட்டி ஊக்கமளிக்கும் வகையில், ‘தூய தமிழ் ஊடக விருதினை’த் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தூயதமிழ்ச் சொற்களையும், காலத்திற்கேற்ற புதிய கலைச்சொற்களையும் பயன்படுத்தி மக்களுக்குச் செய்திகளை வழங்கும் ஒரு காட்சி ஊடகத்தையும், ஓர் அச்சு ஊடகத்தையும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தின் வழியாகத் தேர்வுசெய்து, தமிழ் அகராதியியல் நாள் விழா’வின்போது ‘தூய தமிழ் ஊடக விருதும்’ பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ஓர் ஊடகத்திற்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)மும், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரைச் சான்றிதழும் வழங்கப்படும்.

விருதுபெறத் தகுதிவாய்ந்த, விருப்பமுள்ள ஊடக நிறுவனம் சொற்குவை.காம் (https://sorkuvai.com/) என்ற வலைத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி 29.01.2021-ஆம் நாளுக்குள் agarathimalar2020@gmail.com முகவரிக்கு அனுப்புவதுடன், தங்கள் நிறுவனம் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியதை உறுதிசெய்யும் வகையில் சான்றுகளை இணைத்து, கீழ்க்கண்ட இயக்கக முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ 29.01.2021 மாலைக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

இயக்கக முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் ட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75,
சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028.
இயக்குநர்

Trending

Exit mobile version