வணிகம்

உஷார்.. எல்இடி டிவி விலை அதிரடி உயர்வு.. எப்போது முதல்?

Published

on

எல்இடி டிவி விலை ஜனவரி மாதம் அதிகரித்த நிலையில், மீண்டும் ஏப்ரல் மாதம் முதல் உயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்இடி டிவிகளில் பயன்படுத்தப்படும் open-cell பேனல்கள் விலை சர்வதேச அளவில் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எல்இடி டிவி விலை உயர்வுக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

பானாசோனிக் எல்இடி டிவி விலை 5 முதல் 7 சதவீதம் வரையில் உயர வைப்புள்ளதாக, அதன் இந்தியத் தலைமை நிர்வாக இயக்குநர் மனிஷ் ஷர்மா கூறியுள்ளார்.

வீடியோடெக்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவன இயக்குநர் அருண் பஜாஜ், 32 இன்ச் டிவி விலை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விலை உயரலாம் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version