இந்தியா

ஏப்ரல் 1 முதல் மருந்துகள் விலை உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அகில இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% விலை உயர்த்த இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது .

இதன் காரணமாக பாராசிட்டமால் போன்ற மருந்துகள், அசித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று மருந்துகள், ரத்த சோகை எதிர்க்க மருந்துகள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் மருந்துகள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சில மருந்துகளும் விலை உயர்வு பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் உள்பட அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது மருந்துகள் விலையும் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version