இந்தியா

ஏப்ரல் 1 முதல் தண்ணீர் பாட்டில்களுக்கு பிஐஎஸ் (BIS) கட்டாயம்..!

Published

on

ஏப்ரல் 1-ம் தேதி முதல் தண்ணீர் பாட்டில்களுக்கு பிஎஸ்ஐ (BIS) முத்திரை கட்டாயம் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பின் படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் FSSAI உரிமம் எண் மற்றும் பிஐஎஸ் சான்றிதழும் தண்ணீர் பாட்டில், மினரல் வாட்டர் பாட்டில்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பல தண்ணீர் பாட்டில் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தி நிறுவனங்கள் FSSAI உரிமத்தை வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. பிஐஎஸ் முத்திரை இல்லை, எனவே இது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஐஎஸ் முத்திரை

வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளின் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தை வழங்குவதற்கான சான்றிதழ் பிஐஎஸ். சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு சில தயாரிப்புகளுக்கு பிஐஎஸ் முத்திரையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் தண்ணீர் பாட்டில்களுக்கு பிஐஎஸ் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் பாட்டில் தண்ணீர் நிறுவனங்கள் தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கவும் பிஐஎஸ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பிஐஎஸ் முத்திரை நிராகரிக்கப்பட்டால், FSSAI சான்றிதழ் அல்லது உரிமம் நிராகரிக்கப்படும், இடைநீக்கம் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே இனி ஏப்ரல் 1-ம் தேதி பாட்டில் தண்ணீர் வாங்குபவர்கள், பிஐஎஸ் முத்திரை உள்ளதா என்று கவனித்து வாங்கவும்.

seithichurul

Trending

Exit mobile version