இந்தியா

2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரத்துக்காக செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

Published

on

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 3260 கோடி ரூபாயும், அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 4,230 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அனுராக் தாகூர் வழங்கிய தகவலின் படி 2016-2017 நிதியாண்டில் அதிகபட்சமாக மின்னணு ஊட்டங்களில் விளம்பரம் செய்ய 609.15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய அதிகபட்சமாக 2017-2018 நிதியாண்டில் 636.09 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

2014-2015 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 424.84 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 473.67 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2015-2016 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 508.22 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 531.60 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2016-2017 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 468.53 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 609.15 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2017-2018 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 636.09 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 468.92 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2018-2019 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 429.55 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 514.28 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2019-2020 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 295.05 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 317.11 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2020-2021 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 197.49 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 167.98 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2021-2022 நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் 179.04 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 101.24 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

2022-2023 நிதியாண்டில் இதுவரையில், அச்சு ஊடகங்களில் 91.96 கோடி ரூபாயும், மின்னணு ஊடகங்களில் 76.84 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version