உலகம்

இறந்த பிறகும் கோல் அடித்த சிறுவன்… நண்பர்களின் நெகிழ்ச்சி வீடியோ

Published

on

உலகில் சிறந்தது அன்பு எனில் அதில் அதிகம் பங்கெடுப்பது நட்புதான். நல்ல நண்பர்களை கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அதனால்தான் ‘உன் நண்பன் யார் என சொல். நீ யார் என சொல்கிறேன்’ என்கிற பழமொழியே உருவானது.

அதேபோல் நெருக்கமான நண்பனின் மறைவை விட கொடுமையான எதுவுமில்லை. அந்த இழப்பை தாங்கிக்கொள்ளவே முடியாது. சமீபத்தில் அது போன்ற சம்பவம் மெக்ஸிகோவில் நடந்துள்ளது. சமீபத்தில் மெக்சிகோவில் 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். அவனின் இறுதி அஞ்சலியின் போது அவனின் நண்பர்கள் செய்த காரியம்தான் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

அவர்கள் வழக்கமாக கால்பந்து விளையாடும் போது இடத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை வைத்து பந்தை உதைத்து அவரின் பெட்டியில் பட்டு அது கோல் ஆவது போல் செய்தனர். அதாவது, நண்பன் கடைசியாக ஒரு கோல் அடித்துவிட்டு அமைதி கொள்ளட்டும் என்கிற உணர்வில் அதை செய்தனர்.

இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோவை, மறைந்த நடிகர் விவேக்கின், உதவியாளரும், அவருடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவருமான செல் முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/cellmurugan/status/1422768625086210056

 

 

seithichurul

Trending

Exit mobile version