தமிழ்நாடு

சென்னையில் இலவச வை ஃபை வசதி: மாநகராட்சி அறிவிப்பு

Published

on

சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பதும் குறிப்பாக திமுக ஆட்சி அமைந்தவுடன் சென்னை மாநகராட்சி கமிஷனராக சுகன் தீப்சிங்பேடி அவர்கள் பொறுப்பு ஏற்றவுடன் புதுப்புது வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னை மக்களுக்கு இலவச வை-பை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் இலவச வைஃபை வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் உள்ள இலவச வை-பை வசதியை பெறுவதற்கு உங்கள் மொபைல் எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்வதன் மூலம் இலவச வைஃபை வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

சென்னை மாநகராட்சியின் இந்த இலவச வைபை வசதியை 30 நிமிடங்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த இலவச வைபை வசதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த இலவச வைஃபை வசதி சென்னையை அடுத்து வேறு சில முக்கிய நகரங்களுக்கும் விரைவில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 49 இடங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து தகவல்களை httpsps://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

seithichurul

Trending

Exit mobile version