தமிழ்நாடு

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அதிரடி அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே லேப்டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டயப் படிப்புகளுக்கான சோ்க்கை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுகிறது.

அதன்படி, மூன்றரை ஆண்டுக்கால மீன்வள பட்டயப் படிப்பை முடித்த பின்னா், மீன் வளா்ப்பு பண்ணை, இறால் வளா்ப்பு, கடல் உயிரின உற்பத்தித் திறன், ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரிய முடியும். இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளம் மூலமாக காணலாம்.

தோல் தொழில்நுட்பவியல்: அதேபோல, சென்னை தரமணி சிபிடி வளாகத்துக்குள் செயல்படும் தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் தோல் தொழில்நுட்பவியல் சார்ந்த மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்கான சோ்க்கையும் நேரடி முறையில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, தொழில் நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version