இந்தியா

ஜனவரி மாத இலவச தரிசன டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் திருவிழா காலங்களில் தரிசனம் செய்யும் டிக்கெட் ஆகியவை சமீபத்தில் ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அந்த டிக்கெட்டுகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் கிடைக்கும் என்றும் பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற இருக்கும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள், மற்ற நாட்களில் இலவச தரிசன டோக்கன்களும் தேவஸ்தான இணையதளத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 2 தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரம் முன்னதாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை காண்பித்தும் தரிசனம் செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version