தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு இந்த ஆண்டு வழங்கப்படுமா?

Published

on

மாண்புமிகு அம்மாவின் அரசால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா 2ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய டேட்டா கார்டுகளை வழங்கவும் வலியுறுத்தி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கல்வியின் தரம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதற்கு அதிமுகவின் 30 ஆண்டு ஆட்சியே காரணம் என்றும், கடந்த பத்தாண்டுகளில் 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 7 சட்ட கல்லூரிகள் மற்றும் 17 புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றபோது மாணவர்களின் வசதிக்காக 2 ஜிபி டேட்டா கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது என்றும் இதனால் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

இந்த நிலையில் தற்போதும் விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட முறையில் இந்த ஆண்டு புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் புதிதாக டேட்டா கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டேட்டா காடுகளுக்கு புதுப்பித்து தர வேண்டுமென்றும் தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும் அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தவும் திமுக அரசு ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசால் வழங்கப்பட்ட 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்துக் இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version