தமிழ்நாடு

பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் தேவையற்றாது: சீமான்

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் பொறுப்பேற்ற உடன் பிறப்பித்த 4 உத்தரவுகளில் ஒன்று பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது தெரிந்ததே. இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக பெண்கள் மத்தியில் முதல்வர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒயிட்போர்டு பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை என்ற போதிலும் பெரும்பாலான பெண்கள் தற்போது இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே டெல்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து என்ற நடைமுறை இருந்து வரும் நிலையில் இதனை அமல்படுத்திய இரண்டாவது மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு காரணமாக தமிழக போக்குவரத்து துறைக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அந்த நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு பெண்களின் பயணத்துக்கு உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண்களுக்கு கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடதக்கது.

தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு அரசியல்வாதிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழகம் தற்போது 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் இருக்கும்போது இலவசம் தேவையற்றது என்றும், வேண்டும் என்றால் பெண்களுக்கு கட்டணம் குறைப்பு செய்யலாம் என்றும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்பது தேவையற்றது என்றும் இதை அரசு நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் திபெத் மக்களுக்கு இந்தியாவில் பல்வேறு சலுகைகள் வழங்கியது போல இலங்கைத் தமிழர்களுக்கும் இரட்டைக்குடியுரிமை உள்பட முக்கிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல் பாடப்புத்தகங்களில் அரசியல் தலைவர்களின் பெயரை எடுக்க வேண்டாம் என முதல்வர் அறிவித்தது அவருடைய அரசியல் நாகரீகத்தை காட்டுகிறது என்றும், ஆனால் அதே நேரத்தில் பாடப்புத்தகங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் தேவையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version