தமிழ்நாடு

திருநங்கைகளுக்கும் பேருந்தில் இலவசமா? முதல்வர் முக ஸ்டாலின் பதில்!

Published

on

தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவைகளில் ஒன்று பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் பெண்களை அடுத்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் ‘பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் திருநங்கைகளுக்கும் இந்த திட்டத்தை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது

மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version