தமிழ்நாடு

இன்று முதல் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு விநியோகம்!

Published

on

மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கும் நகர, உள்ளூர் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஏற்கனவே இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டு இருந்தாலும், டிக்கெட் இல்லாமல் இந்த பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

டிக்கெட் எடுத்த பயணிகள் மற்றும் எடுக்காத பயணிகள் இடையில் குழப்பம் ஏற்படும் என்பதற்காக 4 தனி வண்ணங்களில் பேருந்து டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த டிக்கெட்கள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. எனவே கட்டமில்லா பயணம் என்றாலும் டிக்கெட்களை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending

Exit mobile version