தொழில்நுட்பம்

போலி வலைத்தளம் உருவாக்கி 3000 பேரிடம் 12 லட்சம் மோசடி.!

Published

on

மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி “panditdeendayalkrishivikas.com” என்ற வலைத்தளம்  மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார் 3000 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளது.

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய விரும்பும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கு தலா ரூ.400 என்ற விதத்தில் சுமார் 3000 விண்ணப்பங்களுக்கு இந்த கும்பல் பணம் வசூலித்துள்ளது.

பணத்தை செலுத்துவதற்கென்று பிரத்தியேக போலி வங்கி அக்கௌன்ட்டையும் இந்த கும்பல் உருவாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் வேளாண்மை அமைச்சகம் புகார் அளித்தது. போலி வலைத்தளம் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரின் ஐ.பி விலாசத்தை வைத்து டெல்லி போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இன்னும் மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version