உலகம்

18 வயது மேல் உள்ளவர்களுக்கு ஆபாச பாஸ்போர்ட்.. குழந்தைகளை பாதுகாக்க அரசின் புதிய திட்டம்..!

Published

on

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆபாச படம் பார்க்க அனுமதிக்கும் வகையில் ஆபாச பாஸ்போர்ட் என்ற புதிய விதியை பிரான்ஸ் நாட்டின் அரசு கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது பாலியல் தளங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று கூறப்பட்டாலும் அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு க்ளிக் செய்ய வேண்டும் என்று ஆப்ஷன் இருந்தாலும் வயதை எந்த இணையதளமும் சரிபார்ப்பதில்லை.

எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் ஆபாச படத்தை கிளிக் செய்து பார்த்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காக பிரான்ஸ் அமைச்சர் புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளார். அதன்படி ஆபாச பாஸ்போர்ட் என்ற புதிய வழிமுறை கொண்டுவரப்படும் என்றும், 18 வயதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் பதிவு செய்தால் மட்டுமே ஆபாச படங்களை பார்க்க முடியும் என்ற நிலையை வரும் என்றும் வரும் செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்குள் 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள் இனி ஆபாச தளங்களை பார்க்க முடியாத வகையில் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் தனக்கு மிகுந்த திருப்தி என்றும் அவர் கூறியுள்ளார். 18 வயது என்ற சரிபார்ப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத இணையதளங்கள் தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆபாச இணையதளத்தை பார்த்து வருகிறார்கள் என்று கூறப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆபாச படத்தை பார்க்க விரும்புபவர் இணையதளத்தை ஓபன் செய்வதற்கு முன்பாக தங்களது வயது சான்றிதழை குறிப்பிடும் வகையில் டிஜிட்டல் வயது சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் இந்த நடைமுறை செய்யப்பட்டால் மட்டுமே ஆபாச இணையதளங்கள் ஓப்பன் ஆகும் வகையில் அனைத்து ஆபாச இணையதளங்களும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் இந்த புதிய சட்டம் கூறுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் 18 வயது சரிபார்ப்பை இணங்க தவறிய ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டை போலவே இந்தியாவிலும் இதே போன்ற ஒரு வழிமுறை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பொழுது தான் குழந்தைகள் ஆபாச படத்தை அணுகுவது தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version