உலகம்

பணம் பெற்று கொள்ளாமல் பாலியல் சேவை.. வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தந்த அறிவிப்பு!

Published

on

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் வென்றால் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் சேவை செய்வோம் என்ற பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்களின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின என்பதும் தெரிந்ததே.

இந்த போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் மட்டுமே போட்டிருந்ததால் அதன்பின் நடந்த பெனால்டி ஷூட் முறையில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உலக கோப்பை கனவை நனவாக்கி உள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தபோது பல்வேறு அதிரடி அறிவிப்புகள் உலகம் முழுவதும் வெளியாகும். அந்த வகையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி வென்றால் ஒரு நாள் மட்டும் இலவசமாக பணம் வாங்காமல் பாலியல் தொழில் செய்ய இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதனை அடுத்து பிரான்ஸ் அணி வென்றால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாலியல் தொழில் செய்பவர்களிடம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வி அடைந்ததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுபோன்ற அறிவிப்பு வெளியிடுவது முதல் முறை அல்ல. ஏற்கனவே பல உலக கோப்பை போட்டிகளில் பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றபோது அந்த அறிவிப்பை நிறைவேற்றி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version