இந்தியா

$200 மில்லியன் மதிப்பில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய ஆலை.. தெலுங்கானாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Published

on

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் $200 மில்லியன் மதிப்பில் புதிய ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை செய்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்று பாக்ஸ்கான் என்பதும் இந்நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் பல தயாரிப்புகளை தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகள் இருந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவிலும் இந்நிறுவனத்திற்கு பல ஆலைகள் உள்ளன என்பதும் சீனாவில் இருந்து தான் ஆப்பிள் நிறுவனத்தின் பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது என்பதும் அதனால் ஃபாக்ஸ்கான் ஆலைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் வர்த்தக போர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பாதிப்புக்கு காரணமாக இருந்தது. இந்த நிலையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்த நிலையில் தான் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்களை தயாரித்துக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனை அடுத்து இந்த ஒப்பந்தத்திற்காக தெலுங்கானா மாநிலத்தில் புதிய ஆலை அமைக்க ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. $200 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த ஆலை தெலுங்கானா மாநிலத்தில் அமைக்கப்பட இருப்பதாகவும் 2023 ஆம் ஆண்டு இந்த ஆலை பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு இந்த ஆலையில் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று மறைமுகமாக அந்த பகுதியில் வர்த்தகம் பெருமளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version