தமிழ்நாடு

மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வெகு விரைவில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த நாள் முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவால்; பாதிக்கப்பட்ட 4 மாணவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை அடுத்து மூன்று நாட்கள் பள்ளி விடுமுறை என்ற தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி முழுவதும் தூய்மைப்படுத்தவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version